No products in the cart.
ரஷ்யா உடன்பட மறுப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்பட மறுப்பது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை சிக்கலாக்குவதாக அமையும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
“போர் நிறுத்தத்திற்கான ஏராளமான அழைப்புகளை ரஷ்யா தொடர்ந்தும் நிராகரிக்கின்றது.
அவர்கள் இந்த கொலைகளை நிறுத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியை வொஷிங்டன் டிசியில் நாளை (18) சந்தித்து கலந்துரையாடுவதற்கு முன்னர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டினை சந்தித்ததன் பின்னர் கருத்து வௌியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், புட்டினுடனான கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன் உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தைத் தவிர்த்து, நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு நேரடியாகச் செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.