No products in the cart.
மாணவர்களின் மொழியியல் மற்றும் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தியுள்ள SLIIT புதிய ஆங்கிலக் கல்வி இளங்கலைமானிப் பட்டம்
இலங்கையின் ஆங்கிலக் கல்விக்குப் புதியதொரு தரநிலையை ஏற்படுத்தும் வகையில், SLIIT இன் மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் மொழியியல் திணைக்களம் ஆங்கிலக் கற்கைகளுக்கான இளங்கலைமானிப் பட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளைக் கொண்ட இந்த விரிவான பட்டப் பாடநெறியானது மாணவர்கள் தமது மொழியியல் மற்றும் தொடர்பாடல் திறங்களை மேம்படுத்தி உயர்ந்த கேள்விகொண்ட துறையில் தொழில்வாழ்க்கையைத் தேடிக்கொள்வதற்கான அணுகலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பாரம்பரியமான ஆங்கில பாடநெறிகள் போல் அல்லது பட்டதாரிகள் தமது வேலைக்கு முதல் நாளில் இருந்தே தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் தொழில்துறையின் நடைமுறை அனுபவத்துடன் கொள்கை ரீதியான அறிவை வளங்கும் வகையில் தனித்துவமான தன்மைகளைக் கொண்டதாக SLIIT இன் பட்டங்கள் அமைந்துள்ளன. மொழி, இலக்கியம் மற்றும் தொடர்பாடல் ஆகிய மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டப் பாடத்திட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்ற 120 கிரடிட்டுக்களை உள்ளடக்கியிருப்பதால் இது, சவால்மிக்க வேலைவாய்ப்பு சந்தையில் மாணவர்களை ஏனைய போட்டியாளர்களுடன் முன்னிலைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டிருப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய வேறுபாடுகளில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், இது கல்வி கற்றலையும் நடைமுறை அனுபவத்தையும் இணைப்பதுடன், ஆய்வுக்கான திறன் மேம்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது. நவீன ஊடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் சூழல்களினால் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இதன் ஊடாக 21ஆம் நூற்றாண்டிற்கு அவசியமான தொடர்பாடல் திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
பரந்துபட்ட இலக்கியப் பிரிவுகள், காலப்பிரிவுகள், இயக்கங்கள் மற்றும் சமூகங்கள் உள்ளிட்ட விடயங்களில் பிரித்தானிய, அமெரிக்க, பொதுநலவாய, ஐரோப்பிய மற்றும் இலங்கை ஆகியவற்றின் பங்களிப்புடான அம்சங்களும் இப்பாடநெறியில் அடங்குகின்றன. இடைக்கால உன்னதங்கள் முதல் பின்நவீனத்துவக் கண்டுபிடிப்புக்கள் வரையான இலக்கியங்கள் குறித்த கண்ணோட்டங்களை மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிகமாக, ஊடகவியல், டிஜிட்டல் ஊடகம், பெருநிறுவனத் தொடர்பாடல், மூலோபாய சந்தைப்படுத்தல் போன்ற விடயப்பரப்புக்களில் சிறப்புப் பயிற்சிகள் மூலம் துறைசார் திறன்களை இந்தப் பட்டப்பாடநெறி ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் பட்டதாரிகள் நவீன தொடர்பாடல் சூழலில் வேலைவாய்ப்புக்களுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும். ஆழமான ஆங்கில இலக்கணம், கல்வி எழுத்துப்பாடுகள், வரலாற்று வளர்ச்சி மற்றும் சமூகமொழியியல் (Sociolinguistics), உளமொழியியல் (Psycholinguistics), உரையாடல் பாணியியல் (Discourse Stylistics) போன்ற பல்வேறு மொழியியல் கோட்பாடுகள் ஆகியவற்றின் விரிவான ஆய்வும் இந்தப் பாடநெறியில் அடங்குகின்றன. இவற்றின் ஊடாக மாணவர்கள், மொழித் தொடர்பாடலில் ஊடகத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் நிபுணத்துவம் பெறுகிறார்கள்.
இந்தப் பாடநெறி மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை SLIIT இன் மாணவர்கள் தமது கல்வி, தூதரக சேவைகள், விளம்பரப்படுத்தல், புத்தக வெளியீடு, படைப்பாற்றல் எழுத்துருவாக்கம், டிஜிட்டல் ஊடகம், ஊடகவியல் மற்றும் பெருநிறுவனத் தொடர்பாடல் உள்ளிட்ட வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற முடியும். அத்துடன், இந்தப் பட்டப் பாடநெறி தனியாகவும், கூட்டாகவும் பணியாற்றுவதற்கான திறன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், தலைமைத்துவம் மற்றும் குழுப் பணிச் சூழலில் மாணவர்கள் சிறந்து விளங்குவதை உறுதிப்படுத்துகின்றது.
உயர் தரமான கல்விக்கான அர்ப்பணிப்புக்காக அங்கீகாரம் பெற்றுள்ள SLIIT நிறுவனம், தகுதியான விரிவுரையாளர்கள் குழு, பெறுமதியான உள்ளிருப்புப் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் சிறந்த தொழில்வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையிலான பலம்மிக்க தொழில்துறைக் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் புதுமையாக்கம் நிறைந்த கற்றல் மற்றும் தொழில்துறையில் பணியாற்றத் தயார் நிலையிலான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு சிறந்த ஒத்துழைப்பாக அமைகின்றது.
முக்கியமாக, SLIIT தன்னுடைய கடுமையான கல்வித் தரநிலைகள், தொழில்துறை ஆலோசனை சபைகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் மூலம் உயர் தரத் தகுதிப்பத்திரத்தை உறுதி செய்கிறது. இப்பாடநெறி மூலம் பட்டதாரிகள் விமர்சன சிந்தனை, தொழில்நுட்ப திறமை மற்றும் நெறிமுறையுடன் கூடிய உலகளாவிய விழிப்புணர்வு போன்ற முக்கிய தன்மைகளை பெறுகின்றனர்.
முழுமையான தொழில்வழிகாட்டல் மற்றும் பணிநியமன சேவைகள், மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தின் முழு காலப்பகுதியிலும் தொடர்ந்து ஆதரவு பெறுவதையும், தொழில்முனைவோராக வெற்றிகரமாக நிலைபெறுவதையும் உறுதி செய்கின்றன. உங்களின் உயர்கல்விக்காக நிறுவனத்தைத் தெரிவுசெய்வதானது எதிர்கால வெற்றிக்குச் சிறந்த முடிவாகும். க.பொ.த உயர்தரத்தில் (உள்நாடு அல்லது சர்வதேச) ஆங்கிலம் உள்ளடங்காலாக அல்லது ஆங்கில மொழியில் ஏதாவது மூன்று பாடங்களில் சித்தி மற்றும் பீடத்தின் திறனறிவுப் பரீட்சையில் தேற்றிய ஆர்வமுள்ள மாணர்கள் உங்களின் அடுத்த கட்சி கல்விக்கான பயணத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள என்ற info@sliit.lk மின்னஞ்சல் முகவரி மற்றும் +94 11 754 4801 அல்லது www.sliit.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக SLIIT நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியும்.