No products in the cart.
அஸ்கிரி அனுநாயக்க தேரரின் பூதவுடல் உபாலி நினைவு மண்டபத்தில் அஞ்சலிக்காக வைப்பு
மறைந்த அஸ்கிரிய மகா விஹாரையின் அனுநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக தற்போது அஸ்கிரிய மகா விஹாரையின் பிரவர உபாலி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூதவுடல் தொடர்பான தகன நிகழ்வு வியாழக்கிழமை (24) பிற்பகல் 2:30 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் முழு அரச அனுசரணையுடன் நடைபெறும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு அறிவித்துள்ளது.
















