வணிகம்

உள்நாட்டு படைப்பாற்றலையும், உலகளாவில் STEM துறைக்கு நிலவும் கேள்வியையும் ஒன்றிணைக்கும் SLIIT ன் Robofest

இலங்கையில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப நிகழ்வுகளில் ஒன்றான Robofest 2025 ஆனது SLIIT பொறியியல் பீடத்தின் ஏற்பாட்டில் SLIIT மாலபே பல்கலைக்கழகத்தில் விரைவில் இடம்பெறவுள்ளது. தேசத்தில் இளம் புத்தாக்குனர்களுக்கான முதன்மையான மேடையாகக் கொண்டாடப்பட்டு வருகின்ற Robofest ஆனது நாடெங்கிலும் மாணவர்கள் மத்தியில் STEM துறை கல்வியை முன்னேற்றி, படைப்பாற்றலை வளர்த்து, மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன்களை முன்னெடுப்பதற்காக ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. 

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தமது தொழில்களை முன்னெடுப்பதற்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட Robofest, உண்மையிலேயே நாடளாவியரீதியிலான ஒரு போட்டியாக வளர்ச்சி கண்டுள்ளது. ரோபோக்களைக் கட்டமைத்து வடிவமைத்து, மென்பொருளை வடிவமைத்து, மற்றும் யதார்த்த உலகின் சவால்களுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வெளிக்கொண்டுவருவதற்கு போட்டியாளர்களை இந்நிகழ்வு ஊக்குவிப்பதுடன், டிஜிட்டல் எதிர்காலத்தின் கேள்விகளை நிறைவேற்றக்கூடிய வல்லமை படைத்தவர்களாக அவர்களை தயார்படுத்துகிறது. 

இவ்வாண்டுப் போட்டியாது மூன்று பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாடசாலைப் பிரிவின் கீழ் நாடெங்கிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட அணிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளதுடன், பல்கலைக்கழக பிரிவின் கீழ் அரச மற்றும் தனியார் கற்கைமையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 250 க்கும் மேற்பட்ட அணிகள் விண்ணப்பித்துள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை ஆகிய இரு தரப்பிலிருந்தும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திறந்த பிரிவில் 15 அணிகள் தம்மைப் பதிவு செய்துள்ளதுடன், புத்தம்புதிதாக ரோபோ உப பிரிவின் சேர்க்கை இது குறித்த ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 

இறுதிப்போட்டிக்கு முன்பதாக ஆரம்ப கட்ட சுற்றுப்போட்டிகளும் Robofest போட்டியின் போது நடாத்தப்படுகின்றன. பாடசாலைப் பிரிவின் கீழ் வீடியோ வடிவ நுழைவுகளை போட்டியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், அவை மதிப்பீடு செய்யப்பட்டு, முதல் 20 விண்ணப்பங்கள் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படும். பல்கலைக்கழக பிரிவின் போட்டியாளர்கள் பிரச்சனைகளுக்கு நேரடியாகத் தீர்வு காணும் சுற்றில் பங்கேற்கவுள்ளதுடன், அவர்கள் மத்தியிலிருந்தும் 20 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும். அவர்களும், திறந்த பிரிவின் கீழ் 15 அணிகளும் இணைந்து, ஒக்டோபர் 7 அன்று இடம்பெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். 

இப்போட்டிக்கு அப்பால், அடிமட்டத்திலும் Robofest கணிசமான நல்விளைவை ஏற்படுத்தி வருகின்றது. தரம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியில் ரோபோ மற்றும் STEM கல்வி சார்ந்த எண்ணக்கருக்களை அறிமுகப்படுத்துவதற்காக, நாடெங்கிலும் இது குறித்த அறிவைப் பரப்பும் தொடர் நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சித்திட்டங்கள் சுமார் 1,500 மாணவர்களை உள்ளடக்கியுள்ளதுடன், இடைச்செயற்பாடுகள் கொண்ட செயலமர்வுகள் மற்றும் நேரடி அனுபவத்தை வழங்கும் அமர்வுகள் அதில் அடங்கியுள்ளன. இது வரை எட்டியுள்ள பாடசாலைகள் மத்தியில் தெனியாய மத்திய கல்லூரி, வெலிமடை மத்திய கல்லூரி, பண்டாரவளை மத்திய கல்லூரி, பதுளை மத்திய கல்லூரி, புனித பீட்டர்ஸ் கல்லூரி, லைசியம் சர்வதேச பாடசாலை, மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி ஆகியன அடங்கியுள்ளன. 

இம்முயற்சியின் முக்கியத்துவம் குறித்து, Robofest 2025 ன் பிரதான இணைப்பாளரான SLIIT பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நுஷார வெதசிங்க அவர்கள் கருத்து வெளியிடுகையில்: “Robofest என்பது வெறுமனே ஒரு போட்டி என்பதற்கும் அப்பாற்பட்டது, அது அடுத்த தலைமுறைக்கு உத்வேகமளிக்கும் ஒரு மேடை. அறிவைப் பரப்பும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக, STEM கல்வியை நேரடியாக பாடசாலைகள் மத்தியில் கொண்டு சென்று, இளம் மாணவர்கள் ஆரம்பப் பருவத்திலேயே ரோபோ, coding, மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் வியப்பான அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்கின்றோம். இவ்வருடத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நுழைவுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை இலங்கையில் இளைஞர்,யுவதிகள் மத்தியில் புத்தாக்கத்தின் மீதான தாகம் அதிகரித்துச் செல்வதை பிரதிபலிக்கின்றது.” 

திறமைசாலிகளை வளர்ப்பதில் SLIIT ன் வகிபாகம் குறித்து பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அயந்த கோமஸ் அவர்கள் வலியுறுத்துகையில்: “Robofest நிகழ்வானது SLIIT ன் பிரதான முயற்சியாக தலைநிமிர்ந்து நிற்பதுடன், எதிர்கால பொருளாதாரத்திற்கு தேவையான திறன்களுடன் எமது சமூகத்திற்கு வலுவூட்டுவதில் எமது அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இந்நிகழ்வானது தொழில்நுட்ப மகத்துவத்தை விளைவிப்பது மாத்திரமன்றி, ஒத்துழைப்பு, படைப்பாற்றல், மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றையும் வளர்க்கின்றது. இலங்கையின் கல்வி மற்றும் தொழில் துறையில் புத்தாக்கத்தின் தர ஒப்பீட்டு நியமமாக Robofest ன் பரிணாம வளர்ச்சியைக் காண்கின்றமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது.” 

அதிகரித்துச் செல்லும் வீச்சு மற்றும் தொடர்ந்தும் விரிவடைந்து வரும் போட்டியின் நோக்கம் ஆகியவற்றுடன், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதில் Robofest தொடர்ந்தும் மத்திய வகிபாகத்தை ஆற்றி வருகின்றது. இது வரையில் இல்லாத அளவுக்கு 2025 ம் ஆண்டு போட்டி மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாக அமையுமென தென்படுவதுடன், அறிவு, திறன், மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் கொண்டாட்டத்தில் இளம் சிந்தனையாளர்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும் தொழில்துறை கூட்டாளர்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கின்றது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…