இலங்கை

நாடு முழுவதும் பொலிஸாரின் அதிரடி வேட்டை!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம், நேற்று (18) ஆம் திகதி அறிக்கையின்படி, குற்றச் செயல்களுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நடவடிக்கைகளின் மூலம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, சந்தேகத்தின் பேரில் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 185 என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் முழுமையான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது:

பரிசோதனை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை  – 29,608

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை – 549

குற்றச் செயல்கள் தொடர்பில் நேரடியாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் எண்ணிக்கை – 26

கைது செய்யப்பட்ட தினப் பிடியாணை உள்ளவர்களின் எண்ணிக்கை – 334

கைது செய்யப்பட்ட திறந்த பிடியாணை உள்ளவர்களின் எண்ணிக்கை – 185

மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் — 309

அலட்சியமாக வாகனம் செலுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் – 44

ஏனைய போக்குவரத்து குற்றங்கள் – 4,392

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…