இலங்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக சமிந்த பதிராஜவை நியமிக்க அனுமதி

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பதவிக்காக முழுநேர பதில் கடமையாற்றும் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவரை நிரந்தர அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக நியமிப்பதற்கென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…