இலங்கை

உலக புகையிலை எதிர்ப்பு தேசிய தின நிகழ்வு நாளை

உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

புகையிலை தொழில்துறையின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவோம், புகையிலை மற்றும் நிகோடின் தயாரிப்புகளுக்கு எதிராக நிற்போம்’ என்பதே இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளாகும். 

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…