No products in the cart.
அல்பர்ட்டாவில் காணாமல் போன சிறுவர்கள் இரண்டு மாதங்களின்பின்னர் பாதுகாப்பாக மீட்பு
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தில் ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூலை 7 ஆம் திகதி அல்பர்ட்டாவின் கிராண்ட் பிரேரி பகுதிக்கு அருகிலுள்ள வால்ஹல்லா சென்டர் என்ற கிராமத்திலிருந்து, நீதிமன்றக் காவல் உத்தரவை மீறி 6 வயதுச் சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டார்.அச்சிறுவன் அவனது பெற்ற தாயாரான கிறிஸ்டா மோரிசன் (35), அவரின் காதலர் டேனியல் லூட்விக் (35) மற்றும் 4 வயதுடைய தம்பியுடன் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு ‘ஆம்பர் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.















