வணிகம்

இலங்கை மருந்துப்பொருட்கள் உற்பத்தியாளர் சம்மேளனம் (SLPMA) முன்னுரிமை அடிப்படையில் இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யுமாறு அழைப்பு

உப தலைவர் தினேஷ் அத்தபத்து கருத்துத் தெரிவிக்கையில், “இது கொள்கை என்பதைப் பற்றியது மட்டுமல்ல, நோக்கம் மற்றும் பொறுப்புணர்வு என்பதைப் பற்றியதாகும். தொழிற்துறை எனும் வகையில், நாம் பொறுப்புக்கூர்பவர்களாக இருக்க வேண்டும் மற்றும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சரியான ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். உயர் தரம் வாய்ந்த, சகாயமான சுகாதார பராமரிப்பு, எமது திறமைசாலிகளை தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் ஏற்றுமதிகளை அதிகரித்தல் போன்றவற்றை எய்துவதற்கான தெளிவான திட்டத்தை நாம் முன்மொழிந்துள்ளோம். இந்த தேசிய நோக்குக்கு இலங்கை முன்னேற்றம் காண்பதற்கு இன்னமும் காலம் தாமதமாகவில்லை என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SLPMA, இலங்கையின் உள்நாட்டு மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் 25 பேரை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், இறக்குமதியில் பெருமளவு தங்கியிருக்கும் தொழிற்துறையில் தொடர்ந்தும் மீட்சியுடன் செயலாற்றுகிறது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், SLPMA அங்கத்தவர்கள் இலங்கையின் தேசிய சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பு அர்த்தமுள்ள வகையில் தொடர்ந்தும் பங்களிப்புகளை வழங்கிய வண்ணமுள்ளனர். இலங்கையின் மருந்துப்பொருட்கள் சந்தையின் பெறுமதி சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருப்பதுடன், அரசாங்கத்தின் கொள்முதலினூடாக 40% கேள்வி நிவர்த்திக்கப்படுவதுடன், தனியார் துறையினூடாக 60% மேற்கொள்ளப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட உத்தரவாதமளிக்கப்பட்ட மீளக்கொள்வனவு உடன்படிக்கையின் பிரகாரம், உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்வது 5% இலிருந்து சுமார் 30% ஆக உயர்ந்துள்ளது. அதனூடாக நவீன உற்பத்தி உட்கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதற்காக, 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான முதலீடுகளை மேற்கொள்ள தனியார் துறையை தூண்டியிருந்தது. அரசாங்கத்தின் விநியோகத்தில் இவ்வாறான அதிகரிப்பு பதிவாகியிருந்த போதிலும், தனியார் துறையின் கேள்வியின் 5% ஐ மாத்திரம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெறுவதுடன், இலக்கு வைக்கப்பட்ட கொள்கைக்கு ஆதரவளிப்பதனூடாக பெருமளவு வாய்ப்பை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். அரசாங்கத்துறையில் முன்னேற்றம் பதிவாகிய போதிலும், தொழிற்துறை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. குறிப்பாக, தொடர்ச்சியாக கொள்கைக்கு போதியளவு ஆதரவின்மை மற்றும் மீளக்கொள்வனவு உடன்படிக்கைகள் காலாவதியாகும் அழுத்தம் போன்றன அவையாக அமைந்துள்ளன. தொழிற்துறையின் உறுதித்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு தெளிவான தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை நிறுவுவது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும், அதிகரித்துச்செல்லும் சர்வதேச உறுதியற்ற நிலைகள் மற்றும் அணுகக்கூடிய மற்றும் சகாயமான மருந்துப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துச் செல்வது போன்ற காரணிகளால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது.

தற்போதைய பிரேரணையினூடாக இலங்கை அதன் உள்நாட்டுத் தேவையின் 75% ஐ சுயமாக உற்பத்தி செய்வது பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதித் துறை மற்றும் 10,000க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக திறன்படைத்த தொழில் வாய்ப்புகளை பாமசிஸ்ட்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் உற்பத்தி நிபுணர்கள் போன்றவர்களை அடுத்த 5 முதல் 10 வருடங்களுள் தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும்.

இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசாங்க அமைச்சுகள், ஒழுங்குபடுத்தல் அமைப்புகள், அபிவிருத்தி முகவரமைப்புகள் மற்றும் தொழிற்துறை பிரதிநிதிகளைக் கொண்ட பல-பங்காளர் செயலணியை நிறுவுவி அளவிடக்கூடிய இலக்குகள் மற்றும் ஒழுங்கிணைக்கப்பட்ட கொள்கை ஆதரவை உறுதி செய்ய SLPMA பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வொரு இலங்கையரும் பாதுகாப்பான, சகாயமான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதில் முழுப் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதில் SLPMA தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதனூடாக இலங்கையை பிராந்திய மருந்துப்பொருட்கள்உற்பத்தியின் முன்னோடியாகத் திகழச் செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனியுடன் கைகோர்த்து அமெரிக்க உறக்கம்சார் தீர்வுகள் வழங்குனரான Englander இலங்கையில் பிரவேசம்

இலங்கையின் மாபெரும் மற்றும் பரந்தளவு பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற மெத்தை தொழினுட்ப நிறுவனமான Englander International உடன் இணைந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற மெத்தைகளை…