No products in the cart.
Sysco LABS Academy இனால் அடுத்த தலைமுறையினருக்கு காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றிய விளக்கங்கள் வழங்கி வைப்பு
Sysco LABS இன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ‘Sysco LABS Academy’ ஊடாக, பாடசாலை மாணவர்களுக்கு தொழினுட்பத் துறை மற்றும் நவீன பணியிட செயலம்சங்கள் பற்றிய நிஜ அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பயிற்சியளிப்பு அமர்வு முன்னெடுக்கப்படுகிறது. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் முதற்கட்ட அமர்வு, பண்டாரவளை, பரி.தோமாவின் கல்லூரியில் இரு நாட்கள் நடைபெற்றன. இதில் Sysco LABS அணியினர் கலந்து கொண்டு, பயிற்சிப்பட்டறைகள், தலைமைத்துவ அமர்வுகள் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை பற்றிய அறிமுகத்தையும் வழங்கி, மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தொழினுட்பத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்துவதில் ஊக்குவிப்பையும் வழங்கியிருந்தனர்.
நம்பிக்கையை கட்டியெழுப்புவது, எதிர்காலத்துக்கு தயார்நிலையில் இருப்பது மற்றும் தொழில்நிலை தெளிவுத்தன்மை ஆகியவற்றில் ஆரம்பத் திட்டம் கவனம் செலுத்துவதுடன், மாணவர்களுக்கு சிந்திப்பது, கைகோர்த்த செயற்பாடு மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பது போன்றவற்றினூடாக நவீன பணியிடச் சூழல்களுக்கு தயார்ப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. தலைமைத்துவம் முதல் சைபர் பாதுகாப்பு வரையில், பொறியியல் அடிப்படைத்தத்துவங்கள், தொழினுட்ப செயற்பாடுகள் மற்றும் பாடசாலையின் பின்னர் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துவது போன்ற பல பரந்த விடயங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.
அறிமுகம் தொடர்பாக Sysco LABS இன் மக்கள் செயற்பாடுகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரெஹான் அந்தனிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “Sysco LABS இல், அடுத்த தலைமுறை தொழினுட்பவியலாளர்களையும், தொழிற்துறை முன்னோடிகளையும் ஊக்குவிப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். துரித, எதிர்காலத்துக்கு தயாரான திறமையாளர்களை கட்டியெழுப்பி, அதனூடாக நாட்டின் தகவல் தொழினுட்பம்/ BPM தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான எமது நீண்ட கால அர்ப்பணிப்பின் அங்கமாக Sysco LABS Academy அறிமுகம் அமைந்துள்ளது. இந்த நடவடிக்கையினூடாக, மாணவர்களை ஊக்குவிக்கவும், தொழிற்துறைகளை அர்த்தமுள்ள வகையில் வடிவமைப்பதில் அவர்களால் ஆற்றக்கூடிய பங்கு பற்றியும், நிஜ உலக பிரச்சனைகளை தீர்த்து, இலங்கையின் புத்தாக்க சூழல்கட்டமைப்புக்கு பங்களிப்பு வழங்குவது பற்றிய ஊக்குவிப்புகளை வழங்க எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
Sysco LABS Academy செயற்பாட்டினூடாக, பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம் திறமைசாலி மாணவர்களுக்கு பிரயோக திறன்கள், ஆலோசனை வழிகாட்டல்கள் மற்றும் தொழிற்துறை வெளிப்படுத்தல்களை வழங்கி, எதிர்கால தொழில்நிலைகளுக்கு தயார்ப்படுத்தும் செயற்பாடுகளில் முதலீடுகளை Sysco LABS மேற்கொண்டுள்ளது.
Sysco LABS பற்றி
Sysco LABS என்பது உலகின் மாபெரும் உணவுச் சேவைகள் வழங்கும் நிறுவனமான Sysco Corporation (NYSE: SYY) இன் புத்தாக்க பிரிவாகும். Fortune 500 நிறுவன தரப்படுத்தலில் 54 ஆம் இடத்தில் Sysco தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், உணவுப் பொருட்களை உணவகங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை மேற்கொள்ளும் சர்வதேச ரீதியில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமாகும். உணவு சேவைகள் மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு அவசியமான சாதனங்கள் மற்றும் பொருட்களையும் கொண்டுள்ளது. 76000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு, உலகளாவிய ரீதியில் 340 க்கு அதிகமான ஸ்மார்ட் விநியோக பகுதிகளை இயக்குவதுடன், 14,000 IoT செயற்படுத்தப்பட்ட ட்ரக்களினூடாக சுமார் 730,000 வாடிக்கையாளர் பகுதிகளுக்கு சேவைகளும் வழங்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், நிறுவனம் 78 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான விற்பனைகளை பதிவு செய்துள்ளது.
இலங்கை Sysco LABS, இனால் Sysco வின் முடிவு-முதல்-முடிவு செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படுகின்றன. Sysco LABS இன் enterprise தொழினுட்பம், முடிவு-முதல்-முடிவு உணவு சேவை தொழிற்துறையில் பிரசன்னமாகியிருப்பதுடன், உணவு தயாரிப்புகள், வர்த்தகநாமமிடல்கள், களஞ்சியப்படுத்தல்கள் மற்றும் களஞ்சியசாலை செயற்பாடுகள், ஓடர் வைப்புகள் மற்றும் விலையிடல்கள், உணவு விநியோகம் மற்றும் பொருட்களை விநியோகித்தல் போன்றவற்றை Sysco இன் சர்வதேச வலையமைப்பிலும், வாடிக்கையாளரின் உணவகத்தில் உணவருந்தும் அனுபவத்திலும் பிரசன்னமாகியுள்ளன