No products in the cart.
DFCC வங்கி தேயிலைத்துறை ஈடுபாட்டின் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதியளிக்கிறது
DFCC வங்கி இலங்கையின் தேயிலை மதிப்புச் சங்கிலியில் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டிற்கான தனது நிலைப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஆதரிக்கும் தனது பரந்த தேசிய உக்தியின் ஒரு பகுதியாக DFCC வங்கி அன்மையில் பலாங்கொடையில் உள்ள விக்கிலிய தேயிலைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 28 நேர்முக மேலாளர்களுக்கு ஒரு விசேடமான விழிப்புணர்வு அமர்வொன்றை நடத்தியது. இவ் நேர்முக மேலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கும் சிறு உற்பத்தியாளர்களுக்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பாளர்களாகவும் செயற்பாட்டு தலைவர்களாகவும் உள்ளனர்.
இந்த அமர்வானது DFCC வங்கியின் மதிப்புச் சங்கிலி நிதியளிப்பு தீர்வுகளை முன்னிலைப்படுத்தியது. இதில் சிறு அளவிலான உற்பத்தியாளர்களின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட கடன் தயாரிப்புக்கள் ஆளுமை விருத்தி தொடர்பான வழிக்காட்டுதல்கள் மற்றும் நிதி கருவிகள் என்பன உள்ளடங்கியிருந்தன.
இவ்வறிவார்ந்த செயலமர்வானது நேர்முக மேலாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதி தொழில் ஒன்றிற்கான அடிமட்ட விடயங்கள் பற்றியும் நிதி சார்ந்த உள்ளடக்கங்களுடைய அணுகலை விருத்தி செய்வது தொடர்பாகவும் DFCC வங்கியானது இதனை ஒரு நோக்கமாகக் கொண்டும் செயற்படுகிறது.
DFCC வங்கியின் சப்ரகமுவ மண்டலத்திற்கான MSME குழுத்தலைவர் மற்றும் பலாங்கொடை கிளையின் MSME அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட இச்செயலமர்விற்கு விக்கிலிய மற்றும் நியூ ஹோப்வெல் தேயிலை தொழிற்சாலையின் நிதிக் குழுவினர்கள் இணைந்து அனைத்து ஒழுங்குப்படுத்தல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
DFCC வங்கியின் சில்லறை மற்றும் வணிக வங்கி முகாமையாளரான சிரேஷ்ட துணைத்தலைவர் ஆசிரி இத்தமல்கொட அவர்கள் தனது உரையில் எங்கள் இலக்கானது ‘மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு அடுக்கையும் மேம்படுத்துவதாகும் – கடன் மூலம் மட்டுல்லாமல் திறனையும் நம்பிக்கையையும் உருவாக்குவதன் மூலமும் ஆகும் என்ற கருத்தொன்றினை முன்வைத்தார். அத்துடன் ‘நேர்முக மேலாளர்கள் களத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தனித்துவமாக செயற்பட கூடியவர்களாகவும் மேலும் அவர்களின் முயற்சியானது அவர்கள் பணியாற்றும் சமூகங்களுக்கு சரியான நேரத்தில் தகவல் அறிந்த நிதி ஆதரவை வழங்கவும் வழி சமைக்கிறது’. இந்த முயற்சியானது குறிவைக்கப்பட்ட வெளிப்பயணம் கிராமப்புற ஈடுபாடு மற்றும் துறை சார்ந்த நிதி தீர்வுகள் மூலம் SME மற்றும் MSME களை ஆதரிக்க DFCC வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான வளர்ச்சி பாதையின் அனுபவத்துடன் DFCC வங்கி தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் நிதி சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது.