இலங்கை

அரசியல் தீர்வு தொடர்பில் பாராளுமன்றில் முழுநாள் விவாதம்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது. 

பிரேரணை தொடர்பான கோரிக்கையினை பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமும், சபாநாயகரிடத்திலும் கடந்த மாதம் 23ம் திகதி தாம் முன்வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். 

நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர், இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணையாக முன்வைக்கப்பட்டு அன்றைய தினம் பாராளுமன்றில் முழுநாள் விவாதமாக இடம்பெறும். 

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, நிலஅபகரிப்புக்கு எதிர்ப்பு , மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடயங்களை அன்றைய தினம் சபையில் வலியுறுத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…