இலங்கை

இந்தியத் தூதுவர் – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு- சமகால நிலைமை பற்றி விளக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், ச.குகதாசன், து.ரவிகரன், மருத்துவர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.

13 ஆவது திருத்தச் சட்டம் பற்றியும் எடுத்துக் கூறினர். மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் பிற்போடப்படுகின்றமை குறித்தும் விளக்கிக் கூறியுள்ளனர். அனைத்து விடயங்களையும் தூதுவர் செவிமடுத்தாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…